போதும் நிறுத்துங்க!! பார்க்க கூசுது!! நடிகை கஸ்தூரி ஆவேசம்!!

 
கஸ்தூரி

 


தயாரிப்பாளரும் விமர்சகருமான ரவீந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வரும் இவர் தயாரிப்பாளர் ரவீந்தரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. அதைத்தொடர்ந்து இவர்களின் பேட்டி யூடியூப்பில் டிரெண்டிங்கானது.

ரவீந்தர்

இந்நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியை கடுமையாக விமர்சித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது இதுதான் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

விஜே நடிகை மகாலட்சுமி

நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘‘பேட்டி எடுத்தவருக்கும் கொடுத்தவருக்கும் எப்படியோ. ஆனால் எனக்கு பார்க்க கூசிப்போயிடுச்சு. யூடியூப் சேனல்கள் எல்லாம் வெட்கப்பட்டு ஜகா வாங்க வேண்டும்னு நினைச்சி நியூஸ் சேனலில் இறங்கிட்டாங்களா? போதும் ரவீந்தர் நிறுத்துங்கள்’’ என்று காரசாரமாக பதிவிட்டுள்ளார். இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web