வலுபெரும் பாஜக!! இன்று பாஜகவில் இணைந்தார் நடிகர் அஜித்தின் தோழி!!

பிரபல கார் , பைக் ரேசரும்,  சினிமா நடிகையுமான அலிசா அப்துல்லா, இன்று தமிழக பஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில்  தன்னை அக்கட்சியில் இணைத்துகொண்டார்.

 
நடிகர் அஜித்தின் தோழி

நடிகர் அஜித்தின்  தோழியும், இரும்புக் குதிரை, சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவருமான அலிசா அப்துல்லா  இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை முன்பு தன்னை அக்கட்சியில் இணைத்துகொண்டார். இவர் ரேசிங்கில் இந்தியாவிலேயே சாம்பியன் பட்டம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர்.  மேலும், பாரத நாட்டின் முதல் பெண் தேசிய பந்தய சாம்பியன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இதுதவிர, பெண் அஜித் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார். நடிகர் அஜித் குடும்பமும் இவரது குடும்பமும் மிகவும் நெருக்கமானவர்கள். குறிப்பாக அஜித்தின் பெண் தோழி பட்டியலில் இவருக்கு தான் எப்போதும்  முதலிடம்.

இந்நிலையில் இவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இவருக்கு பாஜக சார்பில் அக்கட்சியின் துண்டை அணிவித்த அண்ணாமலை  சிறப்பாக வரவேற்றார். மேலும் தங்களது பணியில் அலிசா அப்துல்லா இணைந்துள்ளது மகிழ்ச்சி சென்றும் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மக்கள் பணிகளை செய்ய  அதனை முன்னின்று ஒருங்கிணைக்க அவர் கேட்டுகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டு அங்கு வருகை புரிபவர்களுக்கு சிறப்பு உணவு வழங்க கேட்டுகொண்டார்.

 இந்நிலையில் திராவிட சிந்தனை உள்ள  தமிழகத்தில்  பாஜக, மெல்ல மெல்ல ஆர்.எஸ்.எஸ் , பிஜேபி மூலமாக பிரிவினை வாதத்தை தூண்ட நினைப்பதாகவும் இதற்காக பெரிய, பெரிய தலைவர்கள் சமூக ஆர்வளர்கள்,  திரைத்துறையினர், பிரபலங்களை தங்கள் கட்சியில் வலைத்துபோட நினைப்பதாகவும் அவ்வாறு வரும் பிரபலங்களை வைத்து கட்சியை வளர்க்க நினைப்பதாகவும் பலர் குற்றம்டாட்டுகின்றனர்.

From around the web