கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை! போலீசார் விசாரணை!

 
விடுதியில் தற்கொலை

தனியார் கல்லூரி விடுதியில், தீபாவளிக்கு ஊருக்கு செல்ல இருந்த நிலையில், மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், வெங்கடாஜலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் சதீஸ் (21). இவர் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி இ.சி.இ. இறுதியாண்டு படித்து வந்தார். தீபாவளியை முன்னிட்டு மாணவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். மாணவர் சதீசும் நேற்று மதியம் சொந்த ஊருக்கு செல்வதற்காக கல்லூரி விடுதியில் இருந்து புறப்பட்டு சென்றார். 

இந்நிலையில் ராசிபுரம் அருகே உள்ள பாலப்பாளையம் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் அவரது கல்லூரி நண்பரான, சேலத்தை சேர்ந்த மாதேஸ் மகன் கலாநிதி (26) என்பவர் வீட்டுக்கு சென்றார். அங்கு இருவரும் சேர்ந்து போதைப் பொருள் உபயோகப்படுத்தியதாக கூறி புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

மாணவர் தற்கொலை

இதில், மாணவர்கள் இருவரும் போதை பொருள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. சம்பவ இடம் ராசிபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதாக இருந்ததால், சதீஸ் மற்றும் கலாநிதி ஆகியோரை ராசிபுரம் போலீசில் ஒப்படைத்தனர். ராசிபுரம் போலீசார் மாணவர் கலாநிதியின் பெற்றோரை அழைத்து பேசினர். மாணவர் சதீசுக்காக கல்லூரி ஆசிரியர்களை வரவழைத்து பேசினர். பின்னர் மாணவர்கள் இருவரையும் ராசிபுரம் போலீசார் எச்சரித்து அனுப்பி விட்டனர். 

இந்நிலையில், நேற்றிரவு மாணவர் சதீஸ் மீண்டும் கல்லூரியின் விடுதிக்கு சென்று அவரது அறையில் தங்கி உள்ளார். மற்ற மாணவர்கள் யாரும் அவரது அறையில் இல்லாத நிலையில் மாணவர் சதீஸ் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விடுதி வார்டன் கல்லூரி நிர்வாகத்திற்கும், புதுச்சத்திரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். 

தற்கொலை

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சதீசின் உடலை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சதீஸ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக சதீசின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் போலீசார், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். போலீசாரின் விசாரணைக்குப் பிறகு தான் மாணவர் தற்கொலைக்கான காரணம் தெரிய வரும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web