புற்றுநோயுடன் போராடி 81.6% மதிப்பெண் பெற்ற மாணவி உயிரிழப்பு!! பெரும் சோகம்!!

 
திவ்யா

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள மாஜிவாடா பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா பவலே (16). இவருக்கு கடந்த ஏப்ரல் 2021-ம் ஆண்டு டி-செல் லிம்போமா (T-cell lymphoma) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 

திவ்யா

பத்தாம் வகுப்புப் படித்து வந்த திவ்யா, மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த காரணத்தால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. இருப்பினும் மனம் தளராத திவ்யா, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்புத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். இந்த தேர்வில் 81.60 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இவருக்கு அனைத்து தரப்பினர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. 

இந்த நிலையில் நீண்ட நாட்கள் புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த திவ்யா பவலே கடந்த 1-ம் தேதி அன்று உயிரிழந்தார். இதுகுறித்து அவரது பள்ளி நிர்வாகம் கூறியிருப்பதாவது, “அவள் ஒரு மகிழ்ச்சியான அதிர்ஷ்ட பெண். நோய் வாய்ப்பட்டிருந்தாலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். கடந்த சில நாட்களாக நோயின் தீவிரம் அதிகமானது. இதன் காரணமாக அவர், திங்கள்கிழமை (ஆக். 1) மாலை காலமானார்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளது. 

rip

புற்றுநோய் பாதிப்பால் இறக்கும் தருவாயில் இருந்தபோதும் கூட நம்பிக்கையைக் கைவிடாமல் சிரித்த முகத்துடன் வாழ்வை எதிர்கொண்ட திவ்யா பவலேவின் இந்த சோகச் செய்தி அவரது குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web