மாணவர்களே உஷார்!! 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும்!! அன்பில் மகேஷ் அதிரடி!!

 
அன்பில் மகேஷ்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2  ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால் கொரோனாவிற்கு முந்தைய முறைப்படி பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று நாடு முழுவதும் 75 வது சுதந்திரதினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைமை அலுவலகத்தில்  இன்று தேசியக் கொடி ஏற்றினார்.

அன்பில் மகேஷ் மாணவர்கள்

இதனைத் தொடர்ந்து சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஷ், " சிக்கனமாக, ஒழுக்கமாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு சாரண, சாரணியர்கள் ஓர் உதாரணம். ராணுவக் கட்டுப்பாடுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சாரண, சாரணியருக்கு வாழ்த்துக்கள். நிலாவில் கால் வைத்தவர்களில் 11 பேர் சாரண, சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்" என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் " கல்வித் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி ஆர்எஸ்எஸ் பின்புலத்தைச் சேர்ந்தவரா என்பது குறித்து சர்ச்சையான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. அவரது செயல்பாடுகள் சரியாக உள்ளதா என்பதே அவசியம். ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அரசு நிர்வாகத்தில் நுழைந்துவிடாதபடி தமிழக அரசு எச்சரிக்கையாகவே செயல்பட்டு வருகிறது. 

+2 பொதுத் தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும்! அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
11 ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும்.  தனியார் பள்ளிகள் 10ம் வகுப்பிற்கு பிறகு 11ம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் நேரடியாக 12ம் வகுப்பு பாடங்களை நடத்துகின்றன. 11 ம் வகுப்புக்கள்  முறையாக நடத்தப்படவில்லை என்ற காரணத்தால்தான் 11 ம் வகுப்பு பொதுத் தேர்வு முறையே கொண்டு வரப்பட்டது. அதனால் இந்த நடைமுறையே தொடரும்" என பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web