மாணவர்கள் உற்சாகம்!! பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு பட்டியல்!!

 
சத்துணவு

தமிழகத்தில்  அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வித்திட்டத்தினை கொண்டுவரவும் தமிழக அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது பள்ளிகளில் காலை நேரங்களில் சிற்றுண்டி தயாரித்து மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

பள்ளி சத்துணவு சாப்பாடு

இத்திட்டம் முதல் கட்டமாக செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முதல்வராக பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்ததை ஒட்டி ஸ்டாலின் இந்த அறிவிப்புக்களை  சட்டப்பேரவையில் வெளியிட்டார். அதன்படி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும், முதல்கட்டமாக  1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்  செப்டம்பர் 15ம் தேதி செயல்படுத்தபடும் எனவும் அறிவித்திருந்தார். 

சத்துணவு
இந்த 1,545 பள்ளிகளில் படித்து வரும் 1,14,095 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5,941 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.  14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவிகளுக்கும், 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


வழங்கப்படும் உணவு பட்டியல்


திங்கள்   - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.
செவ்வாய்  - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி.
புதன்  -  வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்.
வியாழன் -   அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.
வெள்ளி  -  ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி.
வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களை கொண்டு காலை சிற்றுண்டி வழங்கவும்  தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. 

From around the web