மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியல்?! வாகன ஓட்டிகள் அவதி!!

 
மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூட்டடி கள்ளக்குறிச்சி மற்றும் ஆரியநத்தம் என்ற கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் உள்ள பல வீடுகளில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இருக்கின்றனர். அவர்கள் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.பள்ளிக்கு செல்லும் காலை நேரங்களில் மாணவ, மாணவிகளுக்கு பேருந்துகள் போதுமான அளவில் இல்லாததால் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

போலீஸ்

இதனால் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்துகளின் படிகளில் மாணவர்கள் தொங்கிச் செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று காலை 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு கிளம்பிய நிலையில் பேருந்து வராமல் கூட்டடி கள்ளக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்தனர். 

கள்ளக்குறிச்சி
அப்போது அரசு பேருந்து ஒன்று அந்த பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதால், மாணவ, மாணவிகள் ஆத்திரமடைந்தனர். இதைத்தொடர்ந்து பேருந்தை வழிமறித்த மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியல் காரணமாக உளுந்தூர்பேட்டை- சேந்தநாடு சாலையில் சுமார் அரைமணி நேரமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web