நீரில் மூழ்கிய தரைப்பாலங்கள்!! 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதி!!

 
தரைப்பாலங்கள்

தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. அதிகனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன சென்னையை பொறுத்தவரை சுரங்கப்பாதைகளில் நீர் நிரம்பியது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் பகுதியாக நீர் திறந்து விடப்பட்டது.  

தரைப்பாலங்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் ஏரி மற்றும் குளங்கள் மழைநீரால் நிரம்பியுள்ளன. இந்நிலையில் சிங்கபெருமாள் கோவில் - ரெட்டி பாளையம் இடையே இரண்டு தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் தத்தளித்து  பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தரைப்பாலங்கள்

அத்தியாவசியப் பணிகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாத சூழலில் மாணவர்கள்  கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் சுற்றி செங்கல்பட்டு நகருக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. உடனடியாக இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web