அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்!! பயங்கர தீ விபத்து!! சென்னையில் பரபரப்பு!!

 
சிலிண்டர் விபத்து

சென்னை வடபழனி அழகிரி நகர் 5-வது தெருவில் அக்பர் அலி என்பவருக்கு சொந்தமான மூன்று அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டித்தின் தரை தளத்தில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடையும், முதல் தளத்தில் உள்ள கடைகள் காலியாகவும், 2-வது தளத்தில் தனியார் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. 

இந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் தகடு சீட்டால் குடிசை அமைத்து அக்பர் அலிக்கு சொந்தமான டைல்ஸ் கடையில் வேலை செய்யும் 3 ஊழியர்கள் தங்கி உள்ளனர். நேற்று மாலை 3 ஊழியர்களும் வெளியே சென்றிருந்த நிலையில் மொட்டை மாடியில் உள்ள குடிசை தீப்பிடித்து எரிந்தது. 

சிலிண்டர்

அங்கிருந்த 2 எரிவாயு சிலிண்டர்களும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

இதற்கிடையில் இந்த கட்டிடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் 100 அடி சாலையில் உள்ள 2 மாடி கட்டிடத்தின் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை கடையிலும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. 

தீயணைப்பு துறையில் ரோபோக்கள்

அதேபோல் கோயம்பேடு, ரெயில் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசிக்கும் கீர்த்தி நடராஜன் (39) என்பவர் ஊருக்கு சென்றிருந்த நிலையில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் அவரது வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. ஜன்னல் கண்ணாடியை உடைத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.இந்த விபத்தில்  ஏசி இயந்திரம், 2 சைக்கிள் எரிந்து நாசமாயின. இருப்பினும் இந்த விபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்த காவல்துறை வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web