திடீர் அச்சுறுத்தல்.. சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு !

 
கனா

நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி குடியரசுத் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகள் தயாராகி வருகின்றன.

அதேநேரம், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் ரயில், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி பாதுகாப்பு படையினா், மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக சோதனையிடுகின்றனா். 

உநஉம

பயணிகளின் உடைமைகளை சோதனைக்கு உட்படுத்துகின்றனர். வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் பரிசோதிக்கின்றனா். nமலும் விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணிக்கின்றனா்.

ஏற்கனவே உள்ள கண்காணிப்பு கேமராக்களுடன் தற்போது கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கின்றனா். சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஜனவரி 30ஆம் தேதி நள்ளிரவு வரை பாதுகாப்பு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கோயம்பேடு பேருந்து  நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் உள்பட பிரதான நகரங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

From around the web