சூப்பர்!! 10000 ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்!! அமைச்சர் அதிரடி!!

 
அன்பில் மகேஷ் மாணவர்கள்

மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும்,  கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட கற்றல் குறைபாட்டை நீக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி முதல் பல செயல்பாடுகளை தமிழக அரசு தொடர்ந்து ஊக்குவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடத்தப்பட்டது.

அமைச்சர் அன்பில்

இதில் பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் மற்றும் துறைசார் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் பலரும் கலந்து கொண்டனர்.இது குறித்து அன்பில் மகேஷ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கல்வி தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட  மணிகண்டன் பூபதியின் பணி ஆணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு விதமான சர்ச்சையான கருத்துக்களும், புகார்களும் எழுந்த நிலையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ஆசிரியர்கள்

 இவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.  தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நபர்களில் இருந்து தகுதியான ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.
இது தவிர அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள்  10000க்கும் மேல் உள்ளன. அதில் முதுநிலை ஆசிரியர் பணி நியமனம் செப்டம்பர் இறுதிக்குள் முடிக்கப்பட்டு விடும். படிப்படியாக இதர ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web