சூப்பர்!! பள்ளிகளில் காலை உணவு!! திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்!!

 
சத்துணவு

தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு தலைவராக ‘‘இளம்பகவத் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். மேலும் இதன் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு அதிரடி! அங்கன்வாடி மையங்களில் சத்துணவு!

இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டிருந்தது. இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வித்திறன் மற்றும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பதால் இத்திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வந்தனர்.

சத்துணவு

இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘இளம்பகவத் ஐ.ஏ.எஸ். முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்புத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி தமிழ்நாட்டில் இயங்கி வரும் 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. அதற்கான ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம் செய்யப்பட்டுள்ளார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web