சூப்பர் !! டூப்பர்!! அரசு பேருந்துகளில் தானியங்கி பயணச்சீட்டு!! போக்குவரத்துக்கழகம் அதிரடி!!

 
அரசு பேருந்துகள்

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் காகித பயணச்சீட்டு நடைமுறை அமுலில் இருந்து வருகிறது. சாதாரண பேருந்துகளில் மட்டுமல்ல  விரைவுப் பேருந்துகளிலும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற அனைத்து பயணிகளுக்கும் கூட காதித பயண சீட்டு வழங்கப்படுகிறது.

அரசுப் பேருந்து
இந்நிலையில் அரசு பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை செயல்படுத்த போக்குவரத்து கழகம் திட்டமிட்டு வருகிறது. இது குறித்து பல்வேறு ஆலோசனைக்கூட்டங்கள், சாத்திய கூறுகள் அலசி ஆராயப்பட்டன. இதனை விரைந்து செயல்படுத்தும் வகையில் முதல்கட்டமாக சென்னை ,மதுரை, கோவை  மாவட்டங்களில் அமைந்துள்ள  போக்குவரத்து கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பேருந்து
இதற்கான சர்வதேச ஒப்பந்த புள்ளி போக்குவரத்து கழகம் சார்பில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி பயணச் சீட்டு முறை மெட்ரோ ரயில் மற்றும் போக்குவரத்து கழகங்களுடன் இணைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி தானியங்கி முறையில் தேசிய பொதுப் பயண அட்டை, க்யூஆர் கோடு ஆகியவை மூலம் பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web