சூப்பர்!! தங்கம் அதிரடி விலைக்குறைப்பு!! இல்லத்தரசிகள் உற்சாகம்!!

 
தங்கம்

தமிழகத்தில் சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. எத்தனை விலை ஏறினாலும், இறங்கினாலும் தங்கத்தின் மீதான ஆர்வம் மட்டும் இந்தியாவில் குறையவே இல்லை. நகைக்கடைகளில் எப்போதும் காத்துக்கிடக்கும் இல்லத்தரசிகளே இதற்கு பெரும் சாட்சி அமெரிக்கா பெரிய தங்க உற்பத்தியாளராக இல்லாத போதிலும், உலகத்தில் உள்ள தங்கத்தின் ஒரு பெரிய பகுதியை இருப்பில் வைத்திருக்கிறது. அதனால் தங்கம் விலையைத் தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா இருக்கிறது. அதனால் அனைத்து நாடுகளும், தங்கத்தை அமெரிக்க டாலரில் கொடுத்து வாங்குகின்றன.

தங்கம்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இப்படி தொடர்ந்து குறைந்தால், அதிக ரூபாய் கொடுத்து டாலர் வாங்க வேண்டி இருக்கும். எனவே, நிறுவனங்கள் இறக்குமதி செய்ய அதிக டாலர்களைச் செலுத்த வேண்டியிருக்கும். சென்னையில் கடந்த 2 நாட்களாக உயர்ந்து விற்பனையான தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்தது விற்பனையாகிறது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம்
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 55 ரூபாய் குறைந்து, ரூ.4,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து, ரூ.37,560-க்கு விற்பனையாகிறது. 
நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,891-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 45 ரூபாய் குறைந்து, ரூ.3,846-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் குறைந்து, ரூ.58,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.58.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web