சூப்பர்!! அரசு டிராக்டர்கள் குறைந்த வாடகைக்கு!! முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைப்பு!!

 
டிராக்டர் ஸ்டாலின்

தமிழக விவசாயிகள் குறைந்த வாடகையின் பயன்படுத்தும் வகையில், ரூ.22.34 கோடி மதிப்பீட்டில் டிராக்டர் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள வேளாண் கருவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

farmer free eb
ரூ.22 கோடியே 34 லட்சம் செலவில் வேளாண்மை பொறியியல் துறையால் 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள் மற்றும் 185 கொத்து கலப்பைகள் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை சென்னை தலைமைய செயலகத்தில், விவசாயிகளின் குறைந்த வாடகைக்கு வழங்கிடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன் முதல்கட்டமாக 25 டிராக்டர்கள், 25 கொத்து கலப்பைகள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கடந்த 2021& 2022ம் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை நிதிநிதி அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது குறைந்த வாடகையில் வேளாண்மை பொறியியல் துறையில் எந்திரங்கள் வாங்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

டிராக்டர் ஸ்டாலின்

அதன்படி ரூ.22.89 கோடி மதிப்பீட்டில் வேளாண்மை  பொறியியல் சார்பில் 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள் மற்றும் 185 கொத்து கலப்பைகள் கொள்முதல் செய்யப்பட்டன.விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் வேளாண்மைத்துறை என்ற பெயரை, வேளாண்மை உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web