சூப்பர்!! இந்திய வீராங்கனை கர்மன் காலிறுதிக்கு முன்னேறினார்!!

 
கர்மன்

சென்னையில் எஸ்.டி.டி.எ மைதானத்தில் உலக மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ‘டபிள்யு.டி.ஏ., 250’ அந்தஸ்து பெற்ற இந்த டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் அங்கிதா ரெய்னா மற்றும் கர்மன் தண்டி ஆகியோர் களமிறங்கினர்.சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை கர்மன் தோல்வியடைந்த சில மணி நேரங்களிலேயே இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

கர்மன்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.டி.ஏ. மைதானத்தில் உலக மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சர்வதேச நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றனர்.‘டபிள்யு.டி.ஏ., 250’ அந்தஸ்து பெற்ற இந்த டென்னிஸ் தொடரில் போட்டியில் இந்திய அணி சார்பில் ஒற்றையர் பிரிவில் அங்கிதா ரெய்னா மற்றும் கர்மன் தண்டி ஆகியோர் களம் கண்டுள்ளனர்.இந்த போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் விளையாடிய அங்கிதா ரெய்னா தன்னை எதிர்த்து விளையாடிய  ஜெர்மன் நாட்டு வீராங்கனையான தட்ஜனா மரியாவிடம் தோல்வி அடைந்து ஏமாற்றத்தை அளித்தார்.

பின்னர் மற்றொரு இந்திய வீராங்கனையான கர்மன் தண்டி நேற்று நடைபெற்ற 2ம் சுற்று ஆட்டத்தில் கனடா வீராங்கனையான யூஜெனியுடன் மோதினார். கர்மன் தண்டி முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றபின்னர் கனடா நாட்டு வீராங்கனையுடன் மோதினார். இதில் இந்திய வீராங்கனை கர்மன் தண்டி 2-0 என்ற செட் கணக்கில் போராடி தோற்றார். இதனால் கர்மன் தண்டி தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் இவரது காலிறுதி வாய்ப்பு நழுவிப்போனது.

கர்மன்

இதற்கிடையில் இரட்டையர் பிரிவில் கர்மன் தண்டி காலிறுதிக்கு முன்னேறுவாரா என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. அதன் பின்னர் நேற்று நள்ளிரவில் தொடங்கிய இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை கர்மன் தண்டி வெற்றி பெற்றார். இந்த இரட்டையர் பிரிவில் ருதுஜா போஸ்லாவுடன் கர்மன் தண்டி ஜோடி சேர்ந்து விளையாடினார். 

இவர்கள் பிரார்த்தனா தோம்பர் மற்றும் இந்தோனேசியா வீராங்கனை ஜெஸ்ஸி ரோம்பீசை எதிர்த்து விளையாடி 3-6, 7-6, 10-4 என வீழ்த்தி, 2-1 என்ற செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் ருதுஜா போஸ்லா, கர்மன் இணை, இரட்டையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஒற்றையர் பிரிவில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை கர்மன் தண்டி இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியதால் சற்று ஆறுதல் அளிக்கிறது என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web