அடி தூள்!! மோடிக்கே முதலிடம்!! உலகத் தலைவர்களின் பட்டியலில் 2 வது வருடமாக தேர்வு!!

 
மோடி

அமெரிக்காவில் மிகவும் பிரசித்தி பெற்ற  தரவு புலனாய்வு நிறுவனம்  மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம். இந்நிறுவனம்  ஒவ்வொரு ஆண்டும் பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் நடப்பாண்டிலும் உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பற்றிய கருத்துக் கணிப்பை நடத்தி முடித்துள்ளது.  இந்த கருத்து கணிப்பு முடிவுகளை மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

மோடி
அந்த பட்டியலில்  உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் 75 %  மக்களின் ஆதரவை பெற்று இந்திய பிரதமர்  மோடி முதலிடத்தை  பிடித்துள்ளார். உலகளாவிய செல்வாக்கு ஒப்புதல் மதிப்பீட்டில், மெக்சிகோ அதிபர் ஆண்டர்ஸ் இமானுவேல் 63 சதவீத மக்கள் ஆதவுடன் இரண்டாவது இடத்தையும்,  இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி 54% மக்கள் ஆதரவுடன் 3வது இடத்தையும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ 42% மக்கள் ஆதரவுடன் 4வது இடத்தையும் பிடித்துள்ளார்.

மோடி


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 41 % ஆதரவுடன் 5 வது இடத்தை பிடித்துள்ளார். கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ 39%  ஆதரவுடன் 6வது இடத்திலும், ஜப்பான் பிரதமர்புமியோ கிஷிடா    38 %  ஆதரவுடன் 7வது இடத்தையும் பிடித்துள்ளனர். இத்தகவலை மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் மோடி முதலிடத்தை  பிடித்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

 

From around the web