சூப்பர்!! அரசுப் பள்ளிகளுக்குள் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றலாம்!! அதிரடி உத்தரவு!!

 
மாணவிகள்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இல்லம் தேடி  கல்வி, சிற்பி , மாணவர்களுக்கான நல்லொழுக்க வகுப்புக்கள் என பல திட்டங்களை முன்னெடுத்து செய்து வருகிறது. இதன் பலனாக கடந்த ஆண்டுகளை விட முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமான அளவு அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாணவிகள் ஸ்டாலின்

வழக்கத்தை விட  பெற்றோர்கள் தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டினாலும் அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘‘தமிழக அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் குறைவான மாணவர்கள் இருந்தால் அவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றலாம் எனத் தெரிவித்துள்ளது. 

மேலும் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் பள்ளிகளில் 30க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் அவர்களையும் வேறு பள்ளிக்கு மாற்றலாம் என்று கூறியுள்ளது. அதன்படி ஊரக பகுதிகளில் 15க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பட்சத்தில்  அவர்களையும் வேறு பள்ளிக்கு மாற்ற முடியும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை தனது உத்தரவில் கூறியுள்ளது.

மாணவிகள்

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப் பள்ளியில் இன்று காலை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு அவர் காலை உணவை பரிமாறிய முதல்வர், அவர்களுக்கு ஊட்டிவிட்டு பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!