சூப்பர்!! தமிழகத்தின் பிரணவ் வெங்கடேஷ் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராக தேர்வு!!

 
பிரணவ்


இந்திய கிராண்ட் மாஸ்டர் பட்டியலில் 75வதாக சென்னையைச் சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் என்ற 16 வயது சிறுவன் தேர்வாகி உள்ளார். அவருக்கு பாராட்டும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.ருமேனியாவில் நடைபெற்ற செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் (16) என்பவர் 75வது கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற 9 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் தேசிய சாம்பியன் பட்டத்தை பிரணவ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரணவ் வெங்கடேஷ்

தமிழ்நாட்டில் இருந்து கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய 27-வது வீரர் என்ற பெருமையை பிரணவ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சர்வதேச கூட்டமைப்பின் கீழ் 2,500 புள்ளிகளை கடந்து, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 3 வீரர்களோடு தொடர்ச்சியாக விளையாடு பெற்றால் மட்டுமே அவர்களுக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். அதனுடன் 2,400 புள்ளிகளுடன் முக்கிய சர்வதேச தொடர்களில் 3 முறை பங்கேற்று, அதில் கிடைக்கும் புள்ளிகளின் அடிப்படையில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

செஸ் ஸ்டாலின்

அதே போன்று சூப்பர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் 2,700 புள்ளிகள் பெற்ற வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.இதுவரையில் இந்தியாவில் 6 வீரர்கள் மட்டுமே சூப்பர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளனர். தற்போது 16 வயதான பிரணவ் வெங்கடேஷ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.இதைத்தொடர்ந்து கிராண்ட் மாஸ்டர் பிரணவ் வெங்கடேசுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. இதனால் தமிழக வீரர்களுக்கும் மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web