சூப்பர்! ஆதிச்சநல்லூரை தொடர்ந்து சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட தங்கம்!

 
சிவகளை

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் மத்திய தொல்லியல்துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. பரம்பு பகுதியில் இதுவரையில் மேற்கொண்ட அகழாய்வின் போது 400க்கும் மேற்பட்ட பொருட்களும், வாழ்விட பகுதிகளில் 300 பொருட்களும், 48 முது மக்கள் தாழிகளுமே கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் குழந்தைகள் விளையாட்டில் பயன்படுத்தும் வட்டசில்கள், பெண்களின் அணிகலன்கள், சதுரங்க காய்கள், நூல் நூற்க பயன்படும் தக்களி, சுடுமண்ணால் செய்யப்பட்ட பொருட்கள், எலும்புகளால் ஆன மற்றும் கற்களால் செய்யப்பட்ட கருவிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.

சிவகளை

மேலும் ஆவாரங்காடு திரட்டு என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் போது, சுடாத செங்கற்களால் எழுப்பப்பட்ட கட்டுமானம், பராக்கிரம பாண்டி திரட்டல் செங்கற்களால் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால என பல முக்கிய கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தன.

இந்நிலையில் முதன் முதலாக தங்கத்தினாலான பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பராக்கிரமபாண்டி திரட்டில் வாழ்விடப் பகுதிகளை கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் போது சிறிய அளவிலான தங்கத்தாலான பொருள் கண்டெடுக்கப்பட்டது.

சிவகளை

இதுவரையில் மண், கல், எலும்புகள் உள்ளிட்டவற்றில் செய்யப்பட்ட  பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் முதன் முதலாக தற்போது தங்கத்தினாலான பொருள் கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணியின் போது தங்கத்தாலான நெற்றிப்பட்டயம் கண்டெடுக்கப்பட்டது குறிபிடத்தக்கது.

From around the web