மீண்டும் சூப்பர் அறிவிப்பு.. தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு கட்டண ரயில் !!

 
thamparam

பொங்கல் பண்டிகையன்றும் தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட்டது. இது தென்மாவட்ட  மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. மீண்டும் சிறப்பு ரயில் இயக்கப்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, குடியரசு தினத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறன.  தாம்பரம்- நாகர்கோவில் (வண்டி எண்:06053) இடையே வருகிற 25ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். மறுமார்க்கமாக, நாகர்கோவில்-தாம்பரம் (06054) இடையே வருகிற 29ஆம் தேதி மாலை 4.15 மணிக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 thamparam
அதேபோல், தாம்பரம்- திருநெல்வேலி- எழும்பூர்: ரயில் எண்( 06021) தாம்பரம் -திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயிலானது ஜனவரி 26 அன்று இரவு 9 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு  அடுத்த நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் திருநெல்வேலி-எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில் ஜன 27 அன்று மதியம் 1 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 2. 30 மணிக்கு எழும்பூர் வந்தடையும். விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

From around the web