சூப்பர் திட்டம்… இனிமே ரேஷன் கடைலயே சிலிண்டர் வாங்கிடலாம்…

 
சிலிண்டர்

கேஸ் சிலிண்டரை எளிதாக பெற்று பயன்பெறும் வகையில் அக்டோபர் 6ம் தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 5 கிலோ எரிவாயு சிலிண்டர் பெறலாம் என கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். கிராமப்புறங்களில் எரிவாயு சிலிண்டர் பயன்பட்டை அதிகப்படுத்தவும், எரிவாயு சிலிண்டர் எளிதில் கிடைக்கும் வகையிலும் நியாயவிலை கடைகளில் எரிவாயு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் ,டீசல், எரிவாயு விநியோகம் செய்யும் எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்த இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

ராதாகிருஷ்ணன்

நாடு முழுவதும் சுமார் 5.32 கோடி எண்ணிக்கையில் உள்ள நியாயவிலை கடைகள் மூலம் செயல்படும் இந்த திட்டத்தின் மூலமாக கிராம மக்கள் பெரும் பயன்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.  பாரத் பெட்ரோலியன், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்கள், மாநில அரசு இணைந்து இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ரேஷன் கடைகளில் சிலிண்டர்

அதன்படி கடந்த அக்டோபர் 6ம் தேதி முதல் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 5 கிலோ எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் படிப்படியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  கோவையில் நியாய விலைக்கடைகளில் 2.5 கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனையை கூட்டுறவுத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.  அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ரேஷன் பொருட்கள் கடத்தல் என்பது இப்போது தொடங்கியது அல்ல. பல காலமாக உள்ளது. பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் அடிப்படையில் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

From around the web