இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு.. ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு !!

 
ops

அதிமுக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரவுள்ளது. இதில் தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும், தங்கள் பலத்தை நிரூபிக்கவும் இரு தரப்பினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். 

எடப்பாடி பழனிசாமி அணி தேர்தலில் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் பன்னீர்செல்வம் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த பரபரப்புக்கு மத்தியில், ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிருகிறோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உள்ளதால் போட்டியிடுகிறோம். எங்களிடமும் கூட்டணிக் கட்சிகள் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

ops

அதேநேரத்தில், இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் நாங்கள் விட்டு தருவோம். சட்டவிரோதமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன். இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன், என்றும் ஓ,பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

ஏற்கனவே பாஜக இதுவரை தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. அதிமுக ஆதரவா என்ற கேள்விக்கு பாஜக தலைவர், கூடி ஆலோசித்து முடிவெடுப்போம் என கூறிவிட்டனர். இந்த சூழலில் பாஜகவுக்கு ஆதரவு என பன்னீர்செல்வமும் கூறியிருப்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

 

From around the web