உச்சநீதிமன்ற வழக்கு நேரடி ஒளிபரப்பு!! இந்திய நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக அதிரடி!!

 
உச்சநீதிமன்றம்


இந்தியாவில் முதல்முறையாக உச்சநீதிமன்றம் வழக்கு நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன்(ஆகஸ்ட் 26) தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதைத்தொடர்ந்து அவர் இன்று இறுதியாக விசாரிக்கும் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. 

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் நேரடி ஒளிபரப்பிற்கு 26ம் தேதி 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப அனுமதித்தது. அதைத்தொடர்ந்து ஒருமுறை கூட இது நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.  எனவே இதுவே முதல் முறை என்பதால் பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.


இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவரது கடைசி வேலைநாளில் தனக்கு அடுத்தபடியாக பதவியேற்கும் புதிய தலைமை நீதிபதியுடன் தனது மேஜையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது மரபு.  அதன் அடிப்படையில் இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா, அடுத்த தலைமை நீதிபதியான யுயு லலித்துடன் இணைந்து வழக்கை விசாரிக்க உள்ளார். இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு அனைவரும் ஒன்றிணைந்து பிரியாவிடை அளிக்க உள்ளனர்.

மகனுக்கு 18 வயதாகும் வரை தந்தை தான் பொறுப்பு: உச்சநீதிமன்றம்..!!

உச்சநீதிமன்ற நேரடி ஒளிபரப்பில்,  பாலியல் குற்றங்கள் மற்றும் திருமண தகராறுகள் சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயங்களைத் தவிர மற்ற வழக்கு விசாரணையை தேவைப்படும் பட்சத்தில் நேரடி ஒளிபரப்பலாம் என்று தெரிவித்திருந்தது. 

இதைத்தொடர்ந்து கர்நாடகா, குஜராத், ஒடிசா போன்ற மாநிலங்களில் செயல்பட்டு வரும் உயர் நீதிமன்றங்கள் அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கங்களில் வழக்கு விசாரணைகளை நேரலையில் ஒளிபரப்பி வருகின்றன. இருப்பினும் உச்ச நீதிமன்றத்தில் இதுவரை நேரடி ஒளிபரப்பு நடைமுறையில் கொண்டு வரப்படவில்லை. தற்போது அந்த நேரலை ஒளிபரப்பாக இருப்பது பெரும் வரவேற்பையும், எதிர்பார்பையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web