டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா வீரர் ரூசோவ் அதிரடி சதம்!

 
க்கா வீரர் ரூசோவ்

டி20 உலக கிரிக்கெட் கோப்பை போட்டித் தொடரில் சதமடித்து தென்னாப்பிரிக்க வீரர் ரூசோவ் அதிரடி காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இதில் குரூப்1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும் குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று சிட்னி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேச அணிகளி மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் - பவுமா ஜோடி களமிறங்கினர். பவுமா தொடக்கத்திலேயே 2 ரன்னில் வெளியேறினார். 

க்கா வீரர் ரூசோவ்

இதையடுத்து டி காக்- ரூசோவ் ஜோடி இணைந்து வங்காளதேச அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த ஜோடியை பிரிக்கமுடியாமல் வங்காளதேச பந்து வீச்ச்சாளர்கள் திணறினர். டி காக் 63 ரன்னில் அவுட்டானார். 2 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 163 ரன்களை குவித்தது. மறுபுறம் தனது அதிரடியை தொடர்ந்த ரூசோவ், சதம அடித்து அசத்தினார். 

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரூசோவ்

இந்த டி20 உலகக்கோப்பையின் முதல் சதம் இதுவாகும். அவர் 56 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்சருடன் 109 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி விளையாடி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web