காமன்வெல்த்: வாள்வீச்சில் தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்று சாதனை!!

 
தங்கம் வென்று சாதனை

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய 22-வது காமன்வெல்த் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், 22 தங்கம் உள்பட மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா 4-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது.இதனைத் தொடர்ந்து தற்போது லண்டனில் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில்  சீனியர் வாள்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி கலந்துகொண்டார்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை, பவானி தேவி எதிர்கொண்டார். இதில் ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை 15-10 என்ற புள்ளி கணக்கில் அவரை வீழ்த்தி இந்திய வீராங்கனை பவானி தேவி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.2019-ம் ஆண்டு இதே போட்டியில் தங்கம் வென்று பவானி தேவி பட்டத்தை வென்றது இது இரண்டாவது முறையாகும். காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் 2022 ஆகஸ்ட் 8-ம் தேதி செவ்வாய்கிழமை தொடங்கியது, இறுதி சுற்றுகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.

உலகில் பல பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் வீரங்கனைகள் கலந்துகொண்டு அசத்தி வருகின்றனர். அதில் சமீபத்தில்  நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் ஆகியவையும் அடங்கும் .

From around the web