காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்ற தமிழக வீராங்கனை!! தந்தை இறந்ததை மறைந்த குடும்பத்தினர்! தங்கப்பதக்கம் வாங்கிய சந்தோஷம் 5 நிமிடம் கூட இல்லையே என கதறல்..

 
வீராங்கனை

தஞ்சை அருகே தந்தை இறந்தது தெரியாத வீராங்கனை காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிலையில் செல்போனில் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் செல்வமுத்து. இவருக்கு வயது 50.   இவரது மனைவி ரீட்டாமேரி . வயது 42.  இவர்களுக்கு லோகப்பிரியா, பிரியதர்ஷினி ,  பிரியங்கா என்ற 3 மகள்கள் உள்ளனர். கூலித்தொழிலாளர்கள் குடும்பத்தில் பிறந்த லோகப்பிரியா எம்.பி. பட்டதாரி ஆவார். சிறுவயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், ஆசிய மற்றும் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.

வீராங்கனை

தற்போது நியூசிலாந்த் நாட்டில் ஆக்லாண்ட்டில்   நடைபெற்று வரக்கூடிய காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில்   லோகப்பிரியா கலந்துக் கொள்ள நியூஸிலாந்து சென்றுள்ளார். இதனிடையே லோகப்பிரியாவின் தந்தை செல்வமுத்து,   நேற்றுமுன்தினம் இரவு  மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை லோகப்பிரியாவுக்கு உடனடியாக தெரிவித்தால் அவர்  விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என்று எண்ணிய குடும்பத்தினர் தந்தை இறந்ததை லோகப்பிரியாவிற்கு தெரியப்படுத்தாமல் மறைத்துள்ளனர்.

பலி

இந்நிலையில்   நேற்று நடைப்பெற்ற  52 கிலோ உடல் எடைப்பிரிவில் ஜூனியர் பிரிவில் 350 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இந்த தகவலை லோகப்பிரியா, வாட்ஸ்அப் மூலமாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்தார். அப்போது தந்தை இறந்துபோன செய்தியை லோகப்பிரியாவிற்கு, அவரது சித்தப்பா செல்வக்குமார் வீடியோகாலில் தெரிவித்தார். இத்தகவலை கேட்டதும் லோகப்பிரியா கதறி அழுதார். வீடியோகாலில் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது பார்ப்பவர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது.   

From around the web