தஞ்சை ராஜ ராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்! முதல்வர் அறிவிப்பு!

 
ஸ்டாலின்

தஞ்சாவூரில், உலகப் புகழ் பெற்ற பெரிய கோவில், இன்றளவிலும் அறிவியலுக்கு சவால் விடுத்து கம்பீரமாக ராஜ ராஜ சோழனின் பெருமையை சொல்லி வருகிறது. நாளை ஐப்பசி சதாபிஷேகம். நவம்பர் 3ம் தேதி மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் விழா தஞ்சாவூரில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், இனி ராஜ ராஜ சோழனின் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோவிலில், நாளை ராஜராஜ சோழனின் 1037ம் ஆண்டு சதய விழா தொடங்குகிறது. சதய விழாவையொட்டி, வழக்கம் போல தஞ்சை பெரிய கோவில், ராஜராஜ சோழன் சிலை ஆகியவை மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தின் பிற மாவட்டங்களில்  மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் சதய விழாவிற்கு வருகை தந்து, கண்டு களிப்பார்கள்.

உலக அதிசயங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் கட்டிட கலையில் ஓங்கி நிற்கிறது தஞ்சை பெரிய கோவில். இந்நிலையில், ராஜ ராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதால், இன்றும் நாளையும் தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மீக சொற்பொழிவு, பரிசளிப்பு விழாக்கள் என களை கட்டத் துவங்கியுள்ளது. 

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா  -  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிக்கையில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web