டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்கிறது! குடிமகன்கள் அதிர்ச்சி!

 
டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

டாஸ்மாக் மதுபான கடைகளில் விரைவில் விலை உயர்த்தப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது குடிமகன்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. 

தற்போது, 5,425 டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. தினந்தோறும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு வகைகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது. அதேபோல், பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் வார விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.

டாஸ்மாக்

டாஸ்டாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் கிடைத்து வருகிறது. 2003-04-ம் ஆண்டில் ரூ.3,639.33 கோடியும், 2004-2005-ல் ரூ.4,872.03 கோடியும், 2005-06-ம் ஆண்டில் ரூ.6,030.77 கோடியும், 2006-07-ம் ஆண்டில் ரூ.7,473.61 கோடியும், 2007-08-ம் ஆண்டில் ரூ.8,821.16 கோடியும், 2008-09-ம் ஆண்டில் ரூ.10,601.50 கோடியும் அரசுக்கு வருவாய் கிடைத்தது. 

இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் ரூ.2 ஆயிரம் கோடி அதிகரித்தது. கடந்த 2019-20-ம் ஆண்டில் ரூ.33,133.24 கோடியும், 2020-21-ம் ஆண்டில் ரூ.33,811.15 கோடியும், 2021-22-ம் ஆண்டில் ரூ.36,013.14 கோடியாகவும் அரசுக்கு வருவாய் கிடைத்தது. இந்த வரி வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் 1937-ம் ஆண்டு மது விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் மதுவிலக்கு திருத்த அவசர சட்டம் நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 

டாஸ்மாக்

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கொண்டு வந்தார். இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் (ஐ.எம்.எப்.எல்.) ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் பொருட்களுக்கும் விதிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டு உள்ளதால் கடைகளில் மதுபானங்கள் விலை மேலும் உயரும் என தெரிகிறது. முதலில் வெளிநாட்டு மதுவகைகள் விலை உயர்த்தப்படும். அதன்பிறகு மற்ற மதுபானங்கள் விலை உயரும் என தெரிகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web