ஆசிரியர்களே.. மாணவர்களே தயாரா இருங்க... இன்று யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியாகிறது!

 
யுஜிசி

கடந்த 2021ம் ஆண்டு நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. உங்களது தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க. பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வுகள் அனைத்தும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தகுதி தேர்வுகளில் தேர்ச்சி அடைபவர்கள் இந்திய அளவில் செயல்பட்டு வரும் அனைத்து  பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர் ஆகலாம். 

யுஜிசி

இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2022 ஜூன் மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று நவம்பர் 5ம்தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

எனவே தேர்வு எழுதிய தேர்வர்கள் www.nta.ac.in  என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இன்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேற் குறிப்பிடப்பட்ட இணையதள முகவரியில் தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு, நெட் தேர்வு முடிவுகளை பெற முடியும்.

கொரோனா எதிரொலி!யு.ஜி.சி. ‘நெட்’ தேர்வுகள் ஒத்தி வைப்பு!

அது மட்டுமல்லாமல் தேர்வர்கள் கூடுதல் விவரங்களை அறிய www.nta.ac.in , ugcnet@nta.ac.in  என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து நாளை நெட் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து தேர்வர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web