பயங்கர விபத்து! அரசு பேருந்து முழுவதும் எரிந்து நாசம்!

 
பேருந்து எரிந்து நாசம்

சிதம்பரத்தில் அரசு பேருந்து ஒன்றின் டயர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், அரசு பேருந்து முழுவதுமாக பரவி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  சென்னையில் இருந்து பயணிகளுடன் சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து ஒன்று வந்து சேர்ந்தது. அப்போது அதே பேருந்து நிலையத்தில் மயிலாடுதுறை செல்ல இருந்த பேருந்தின் பின் பக்க டயர் பயங்கர சத்தத்துடன் டமாரென வெடித்தது. இதை பார்த்த அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டபடியே ஓடினர்.

பேருந்து தீ

அப்போது பேருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தை விட்டு கீழே இறங்கி ஓடினார்கள். சிறிது நேரத்தில் தீ பேருந்து முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதன் காரணமாக சிதம்பரம் பேருந்து நிலையம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

பேருந்து தீ

உடனடியாக சிதம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் போராடி  தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பயணிகள் துரிதமாக செயல்பட்டு பேருந்தை விட்டு இறங்கியதால் நடக்க இருந்த பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த சிதம்பரம் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web