அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! குமரி மாவட்ட தம்பதி பலி !

 
சுந்தரி

மாலத்தீவு தலைநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 9 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 

மாலத்தீவு தலைநகர் மாலேவில் 4 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தரை தளத்தில் கார் பழுது பார்க்கும் நிறுவனம் உள்ளது. கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நிறுவனத்தில் சுமார் இரவு 11.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால், உடனே யாரும் பார்க்காததாலும், பழுது பார்க்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் பெட்ரோல், டீசல்கள் அதிகளவில் இருந்ததாலும், மள மளவென தீ கொளுந்து விட்டு எரிந்து 4 மாடிகளிலும் வேகமாக பரவியது. 

அடுக்குமாடி தீ

பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர், பல மணி நேர  போராட்டத்துக்கு பின் அதிகாலையில் முழுமையாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியரும் பலியானார்கள். 

தீ விபத்து

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் எட்வின் ஜெனில் (44), சுந்தரி (40) உட்பட  தமிழகத்தைச் சேர்ந்த  3 பேர் பலியானார்கள். உயிரிழந்த எட்வின் ஜெனிலும், அவரது மனைவி சுந்தரியும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web