உத்திரபிரதேசத்தில் பயங்கரம்… ஓடும் ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளி விட்ட ரயில் பரிசோதகர்…

 
ராணுவ வீரர்

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி ரயில் நிலையத்திற்கு   ராணுவ வீரர் சோனு குமார் சிங் ராஜ்தானி ரயிலில் பயணம் செய்ய   வந்துள்ளார். ராணுவ வீரர் சோனுக்கு தற்போது டெல்லியில் பணி என்பதால், திப்ரூகர்-புது டெல்லி ராஜ்தானி ரயிலுக்காக பரேலி ஸ்டேஷனில் காத்திருந்தார். காலை 9.30 மணி அளவில் இந்த ரயில் பரேலி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அப்போது பி6 பெட்டியில் ராணுவ வீரர் சோனு ஏறியுள்ளார். அந்த பெட்டியில் இருந்த குபன் போரே என்ற டிக்கெட் பரிசோதகருக்கும்    ராணுவ வீரருக்கும்   டிக்கெட் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ரயில்

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ரயில் ஸ்டேஷனை விட்டு புறப்பட தொடங்கியுள்ளது. அப்போது வாக்குவாதம் செய்த ஆத்திரத்துடன் டிக்கெட் பரிசோதகர் குபன், ராணுவ வீரரை ரயிலை விட்டு கீழே தள்ளியுள்ளார். இதில் சக்கரங்களுக்கு இடையே ராணுவ வீரரின்   கால் சிக்கி துண்டானது. மற்றொரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தற்போது ராணுவ வீரர் சோனு   தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரயில்  நடைமேடை  கட்டணம்  உயர்வு

இதனிடையே   டிக்கெட் பரிசோதகர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மேலும் இதுத்தொடர்பாக சம்மந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது   கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

From around the web