விமான சாகசத்தின் போது பயங்கர விபரீதம்! வெடித்து சிதறிய விமானங்கள்! 6 பேர் பலி!

 
விமான விபத்து

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் எக்ஸிகியூட்டிவ் விமான நிலையத்தில், நேற்று வானில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த சாகச நிகழ்ச்சியின் போது, இரண்டு விமானங்கள் வானில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு பெரும்  விபத்துக்குள்ளானது. 

விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில், இரண்டு விமானங்களும் கீழே விழுந்து வெடித்து சிதறின. போயீங் பீ-17குண்டு தாங்கி விமானமும், மற்றொரு சிறிய விமானும் மோதிய விபத்தில், ஆறு பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன். இரு விமானங்களின் விமானிகள் குறித்து இதுவரையில் எந்த தகவலும் தெரியவில்லை. வானில் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், பலரும் இந்த சாகச நிகழ்ச்சிகளை தங்களது செல்போனில் வீடியோக்களாக பதிவு செய்து கொண்டிருந்தனர். அந்த வீடியோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

அந்த வீடியோவில், பெரிய ரக பீ-17 வகை குண்டு தாங்கி விமானம் தரையிலிருந்து மேல சென்றுக் கொண்டிருக்க, அப்போது இடதுபுறத்தில் இருந்து நேராக வந்த சிறிய ரக பெல் பி-63 கிங் கோப்ரா ரக விமானம், பறக்க எத்தனித்த விமானத்தின் மேற்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில், இரண்டும் விமானங்களுமே கீழே விழுந்து நொறுங்கியது. 

பீ-17 குண்டு தாங்கி விமானம் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விமானங்கள் விபத்துக்குள்ளான பகுதியில் பெரும் சப்தத்துடன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். 


விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சியின் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து, டல்லாஸ் நகரின் மேயர் எரிக் ஜான்சன், போலீஸ் மற்றும் தீயணைப்பு, மீட்பு குழுவினர் தொடர்ந்து சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாகவும், இன்னும் முழு தகவல்கள் வரவில்லை’ என்றும் தெரிவித்தார். 

குண்டு தாங்கி விமானத்திலேயே மிகவும் சிறந்த வகையிலான விமானம் பீ-17 குண்டு தாங்கி விமானம். இந்த விமானம் ஜெர்மனிக்கு எதிரான இரண்டாம் உலகப் போரின் போது, மிகவும் உதவிகரமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதே போன்று, கடந்த 2019ம் ஆண்டு கனெக்டிகட் விமான நிலையத்தில் பீ-17 விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web