காங்கோவில் பயங்கர கலவரம்!! 2 இந்திய ராணுவ வீரர்கள் பலி!!

 
காங்கோ

ஐ.நா. அமைதிப்படைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காங்கோவில் 2 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது காங்கோ நாடு. இந்நாட்டில் அதிகளவிலான பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சியாளர் குழுக்களும் செயல்பட்டு வருவதால் மக்கள், காங்கோ அரசு படைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

ராணுவம்

இதை கருத்தில் கொண்ட ஐ.நா. சபை காங்கோவில் அமைதியை நிலைநாட்டவும், அரசுப்படைகளுக்கு பலமாக இருக்கவும் ஐ.நா. சார்பில் அமைதிப்படை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதில் இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கம் வகிக்கிறார்கள்.இந்நிலையில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருவதால் அதிருப்தியடைந்த அந்நாட்டு மக்கள் வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள புடிம்போ நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைதிப்படை அலுவலகத்திற்குள் திடீரென்று அத்துமீறி நுழைந்தனர். மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் அவர்களை போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கினர். 

ராணுவம்

மேலும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியை பறித்து அவர்கள் மீதே கடுமையான துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஐநா அமைதிபடை வீரர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ஷிஷ§பால் சிங் மற்றும் சன்வாலா ராம் விஷொனி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஐ.நா. பொதுச்செயலாளர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் காங்கோ வன்முறையில் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றிய இந்திய வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கண்டனமும், இரங்கலும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web