காஷ்மீரில் பயங்கரம்! தற்கொலை படை தாக்குதலில் 3 வீரர்கள் பலி!

 
ராணுவ முகாம்

காஷ்மீரில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய பாதுகாப்புப் படையினர் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் பார்கல் என்ற இடத்தில் முகாம் அமைத்து பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 15ம் தேதி சுதந்திர தினத்தையட்டி பாதுகாப்பு பணி மேலும் மும்முரப்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவ முகாம்

இந்நிலையில், பயங்கரவாதிகள் சிலர் ராணுவ முகாம் எல்லையை கடந்து உள்ளே ஊடுருவ முயற்சி செய்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் படை வீரர்கள், அவர்களை நிற்கும்படி கூறி எச்சரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சில பயங்கரவாதி கள்பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படை வீரர்களும் துப்பாக்கிசூடு நடத்தினர். 

தர்ஹால் காவல் நிலைய பகுதியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் திடீரென்று பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்ரவாதிகள் ராணுவத்தினர் பதிலடி துப்பாக்கி சூடு நடத்தி கொன்றனர். இந்த தகவல்கள் அனைத்தையும், ஜம்மு மண்டலத்திற்கான ஏ.டி.ஜி.பி. முகேஷ் சிங் உறுதிப்படுத்தி உள்ளார். பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்னர்.

ராணுவ முகாம்

சுதந்திர தினத்தை முறியடிக்கும் வகையில் பயங்கரவாதிகள் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபடக்கூடும் என்பதால் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web