திருவானைக்கோவிலில் தை தெப்ப விழா கொடியேற்றம்!! கோலாகலத் தொடக்கம்!!

 
கொடியேற்றம்

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தை தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று மாலை தொடங்கியது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளினர்.  கொடிமரத்திற்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.

கொடியேற்றம்
 பின்னர் சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் 4ம்  வீதியுலா வந்து கோயிலை அடைந்தனர்.  உற்சவத்தின் 2ம் நாளான இன்று இரவு சுவாமி வெள்ளி 'மஞ்சத்தில், அம்மன் கிளிவாகனத்தில் உலா வருகின்றனர்.  தொடர்ந்து, தினமும் ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதியுலா நடை பெறும்.

கொடியேற்றம்


 உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தைத் தெப்பம் வருகின்ற 3ம் தேதி நடை பெறுகிறது.  மாலை 5 மணிக்கு மேல் கடக லக்னத்தில் திருவானைக் காவல் டிரங்க்ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருள்வர்.  5ம் தேதி காலை கேடயத்தில் சுவாமி அம்மன் புறப்பாடு, மாலை ரிஷபாரூட காட்சியுடன் தை தெப் பத்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

From around the web