தளபதி 67 படத்தின்பூஜை!! லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் கூட்டணி!!

 
விஜய்

 

பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியாகன ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது சிம்பு பாடியுள்ள தீ தளபதி என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ள வாரிசு படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தப்படத்தை தொடர்ந்து   விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  

விஜய்

இதனிடையே லலித் கூட்டணி தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் 67 படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றுள்ளது.  அதேசமயம் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு   டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடலாம் என கூறப்படுகிறது.  இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

From around the web