சாதியால் புறக்கணிக்கப்பட்ட ஆசிரியை சாதனை!! கொண்டாடும் கிராம மக்கள்!!

 
அங்கன் வாடி

கர்நாடக மாநிலம் டாவனகெரே தாலுகா, ஹலே சிக்கனஹல்லி கிராமத்தில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடியில் ஆசிரியையாக லஷ்மி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரின் சாதியைக் காரணம் காட்டி சிக்கனஹல்லி கிராமத்து மக்கள் இவரைத் தங்களின் கிராமத்தில் அங்கன்வாடி ஆசிரியையாகப் பணியாற்ற மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

மழலையர் பள்ளிகள்

மேலும், அவர் பணியாற்றக் கூடாது என்பதற்காக அங்கன்வாடியை மூன்று மாதங்கள் மூடி,  ஆசிரியை லஷ்மியை வெளியில் நிற்கவைத்தனர். இதனால் ஆசிரியை லஷ்மி பெரும் மனவேதனைக்கு உள்ளான நிலையில், இவர் அவரகெரே அருகிலுள்ள கோஷாலா அங்கன்வாடி மையத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையால் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

தனக்கு நிகழ்ந்த இந்த அவமானத்தை சவாலாக எடுத்துக்கொண்ட ஆசிரியை லஷ்மி, புதிய அங்கன்வாடி மையத்தை உருவாக்கினார். தற்போது அவரின் மையத்தில் 30 குழந்தைகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு தரமான கல்வியை லஷ்மி வழங்கி வருகிறார். இந்த மையத்தை லஷ்மி 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

உயரிய தொழில்நுட்பத்துடன் கல்வி பயிற்றுவிக்கப்படும் இந்த அங்கன்வாடியில் அப்பகுதி மக்கள், தங்களின் குழந்தைகளை கான்வென்ட் பள்ளிகளில் சேர்ப்பதற்குப் பதிலாக ஆசிரியை லஷ்மி பயிற்றுவிக்கும் இந்த அங்கன்வாடியில் சேர்த்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web