கடத்தப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகி சடலமாக மீட்பு! நாமக்கல்லில் பரபரப்பு! கடையடைப்பு!

 
கவுதம்

மிளகாய்ப்பொடி தூவி, காரில் கடத்திச் செல்லப்பட்ட அரசியல் பிரமுகரும், தொழில் அதிபருமான கெளதம், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் கவுதம் (வயது 36). இவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இவரது மனைவி திவ்யபாரதி (29). கவுதம் வெப்படை பகுதியில் சொந்தமாக ஒரு நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் கவுதம் தனது நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு இரவு 9.30 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே உள்ள இருளான பகுதியில் மர்ம நபர்கள் 2 பேர் அங்கு மறைந்திருந்ததை கவுதம் கவனிக்கவில்லை. திடீரென்று அந்த 2 பேரும் கவுதம் வண்டியை வழிமறித்து அவர் கண்களில் மிளகாய் பொடியை தூவி காரில் கடத்திச் சென்றனர். இந்த சம்பவம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்தது.

க்ரைம்
இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கவுதம் கடத்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். கவுதம் கடத்தி செல்லப்பட்ட போது அவரது செல்போன் கடைசி அழைப்பு விபரங்கள் குறித்து செல்போன் நிறுவனங்களிடம் தகவல்களை கேட்டு பெற்றனர். மேலும் 6 போலீஸ் தனிப்படைகளை அமைத்து கவுதமை மீட்கவும் அவரை கடத்திச் சென்ற மர்ம ஆசாமிகளை கைது செய்யவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில்,  கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட அதிபர் கவுதம், சேலம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கத்திக்குத்து காயங்களுடன் கவுதம் சங்ககிரி அருகே வைகுந்தம் ஏரிக்கரையில் சடலமாக இருப்பது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கவுதமின் உடலை மீட்ட போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நீட் தேர்வில் முதலிடம்! நாமக்கல் மாவட்டம் அசத்தல்!

கடத்தி செல்லப்பட்ட கவுதம் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தால் வெப்படை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளிகளை கைது செய்யக் கோரி கடை அடைப்பு போராட்டத்தில் வணிகர்கள் இறங்கியதால் அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த கவுதம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகியாகவும் பதவி வகித்து வந்ததால் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web