4 நாட்களில் சரிந்து நொறுங்கிய பாலம்! 90 பேர் பலியான சோகம்! விபத்துக்கு காரணமாக 5 முக்கிய விவரங்கள்!

 
பாலம்

குஜராத்தில் மோர்பி நகரின் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில், பாலத்தின் மீதிருந்த 500க்கும் மேற்பட்டோர் ஆற்றில் விழுந்த துயரம் நாட்டையே உலுக்கியுள்ளது.  மீட்புப் பணிகள் உடனடியாக துவக்கப்பட்டாலும், இந்த விபத்தில் ஆற்றில் விழுந்தவர்களில் இதுவரை 90 பேர் பலியானதாக வெளியான செய்தி மேலும் அதிர வைத்திருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடியும், குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவியும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணைத் தொகையும் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே நூற்றாண்டுகள் பழமையான குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் மீதான பாலம், பராமரிப்பு பணிகள் எல்லாம் முடிந்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பாக தான் மீண்டும் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டிருந்தது. 

குஜராத் பாலம்

குஜராத்தின் காந்திநகர், வதோதரா மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) ஐந்து குழுக்கள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துகின்றன. 

இந்த விபத்தில், ஆற்றில் விழுந்த 500க்கும் மேற்பட்டவர்களில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளும் இருந்தனர். பாலம் நொறுங்கி ஆற்றில் விழுஅந்த நிலையில், விழுந்த பாலத்தின் கேபிள்களில் மக்கள் உயிரைக் கையில் பிடித்த படி தொங்கிக் கொண்டிருந்தனர். அவசர குழுக்கள் அவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொண்டன. ஆற்று தண்ணீரில் விழுந்தவர்களில் சிலர் வெளியே வருவதற்கு போராடி நீந்தி, ஆற்றங்கரையில் மயக்க நிலையில் இருந்தனர். 

பாலம் இடிந்து விழுந்ததிற்கு முக்கியமான 5 காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.

  • 'தொங்கு பாலம்' என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த பாலம் நூற்றாண்டுகள் பழமையானது. சுமார் 230 மீட்டர் நீளமுள்ள இந்த மோர்பி பாலம், 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது கட்டப்பட்டது. 
  • முதன்முதலில் பிப்ரவரி 20, 1879 அன்று அப்போதைய மும்பை கவர்னர் ரிச்சர்ட் டெம்பிள் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
  •  கடந்த ஆறு மாதங்களாக சீரமைப்பு மற்றும் பழுபு பார்க்கும் பணிகளுக்காக இந்த பாலம், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் மூடப்பட்டது. தீபாவளி மற்றும் பிற பண்டிகை தினங்களை முன்னிட்டு கடந்த அக்டோபர் 26ம் தேதி பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, இது பல சுற்று பழுது மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு உட்பட்டுள்ளது.
  • பாலத்திற்கு தகுதி சான்றிதழ் அறிக்கை கிடைக்கவில்லை. ஆனால் தீபாவளிக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் குஜராத்தி புத்தாண்டைக் கருத்தில் கொண்டு அது மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. தகுதி சான்றிதழை சமர்ப்பிக்காமல் தனியார் அறக்கட்டளை ஒன்று பாலத்தைப் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டது.

  • உள்ளூர்வாசிகள் மற்றும் விபத்தை நேரில் கண்டவர்களின் அளித்த தகவலின் படி, கேபிள் பாலம் துண்டிக்கப்பட்டு விழுந்ததற்கான முக்கிய காரணம், அது அதிகளவிலான மக்கள் கூட்டத்துடன் இருந்தது தான். சுமார் 500 பேர் வரையில் பாலத்தின் மீது இருந்துள்ளனர். ஆனால், இந்த பாலம் 150 பேர் வரையில் பயணிக்கும் திறன் கொண்டது. 
  • சம்பவ இடத்தில் இருந்த பாஜக எம்பி மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியா, பாதிக்கப்பட்டவர்களில் பல குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் இருந்தனர் என்கிறார். 
  • காயமடைந்தவர்கள், ஆற்று நீரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 400க்கு மேல் இருக்கலாம் என்று குஜராத் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 90 பேர் பலியானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் அதிர செய்துள்ளது. 
  • இந்திய கடற்படையின் 50 பணியாளர்களுடன் NDRF ன் படைப்பிரிவுகள், இந்திய விமானப்படையின் 30 பணியாளர்கள் மற்றும் இரண்டு இராணுவ வீரர்களின் இரண்டு நெடுவரிசைகள் மீட்பு நடவடிக்கைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதிநவீன உபகரணங்களுடன் தீயணைப்புப் படையின் 7 குழுக்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web