பட்டப்பகலில் நடந்த கொடூரம்!! பெண்ணின் மார்பகங்கள், காதுகளை வெட்டி கொலை!!

 
நீலம்

சமீபத்தில் டெல்லியைச் சேர்ந்த ஷ்ரத்தா வாக்கர் என்பவர் துண்டு துண்டுகளாக காதலனால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதேபோன்று மற்றொரு சம்பவம் பீகாரில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ளது. பீகாரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தையில் பெண்ணின்  மார்பகங்கள், காதுகள், உடல் உறுப்புகள் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பீகார் மாநிலம் பாகல்பூர் பிர்பைண்டியை சேர்ந்தவர் அசோக் யாதவ். அவரது மனைவி நீலம் தேவி . வயது 40.  இவர்கள் மளிகை கடை வைத்து நடத்தி வந்தனர். அதே ஊரைச்சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் கடன்வாங்கி இருந்தனர். ஒரு மாதத்திற்கு முன்பு பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கட்டையால் அடித்து கொலை

இந்த நிலையில் நீலம் தேவி தனது மகனுடன் பக்கத்தில் உள்ள சந்தையில் பொருட்கள் வாங்க சென்று உள்ளார். அப்போது   ஷகீல் தனது சகோதரர் முகமது ஜூதினுடன் அங்கு வந்து  நீலத்திடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷகிலும் அவரது சகோதரரும் கூட்டம் நிறைந்த சந்தையில் அனைவர் முன்னிலையிலும் இளம்பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். மேலும் அந்த கொடூரர்கள் அந்த பெண்ணின் கை, காது மற்றும் மார்பகங்களை வெட்டினார்.   உடனடியாக அந்த பெண்ணை மீட்ட அருகில் இருந்தவர்கள் மாயாகஞ்சில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

மேலும் இதுத்தொடர்பாக போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி நீலம் இறப்பதற்கு முன்பு   கொலையாளியின் பெயரை போலீசாரிடம் கூறியுள்ளார். அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலிசார் விசாரணையில் தீவிரப்படுத்தியுள்ளனர். பட்டப்பகலில் மக்கள் கூட்டம் நிறைந்த சந்தையில் நிகழந்த இந்த கொலை சம்பவம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

From around the web