காதலியை 35 துண்டுகளாக வெட்டி புதைத்த கொடூரம்!! காதலன் பரபரப்பு வாக்குமூலம்!!

 
ஷ்ரதா அமீன் பூனம்வல்லா

பார்க்காமலே காதல், பேசாமலே காதல், இலக்கிய காதல், காதலுக்காக உருகி உருகி பக்கம் , பக்கமாய் கவிதை எழுதுதல் காதல் கை கூட வில்லை எனில் இருவரும் இணைந்து தற்கொலை செய்து கொள்ளுதல் என்ற நிலை மாறி விபரீதமான வன்மத்துடன் காதலின் நிலை மாறி வருகிறது. காதலியை ரயிலில் தள்ளி கொலை, காதலனுக்கு விஷம் வைத்து கொலை, கொலை செய்து விட்டு தற்கொலை போல் நாடகமாடியது , கூலிப்படையை ஏவி கொலை செய்தல் என சமீபகாலமாக காதலில் விழுந்தவர்கள் பெரும் விபரீத போக்குடன் மாறியுள்ளனர். 

ஷ்ரதா அமீன்பூனம்வல்லா
டெல்லியில் லிவ் இன் டுகெதரில் வாழ்ந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டு, தொடர்ந்து 18 நாட்களாக தினசரி ஒவ்வொரு துண்டாக வனப்பகுதியில் புதைத்த கொடூர இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டிய இளைஞர் பிரிட்ஜில் வைத்திருந்து தினசரி புதைத்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மே மாதம் நடந்துள்ளது. டெல்லியில் உள்ள மெஹ்ராலி வனப்பகுதியில் நள்ளிரவு 2 மணிக்கு தினசரி சென்று ஒவ்வொரு துண்டாக பல்வேறு இடங்களில் காதலியின் உடலை அந்த இளைஞர் புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.

ஷ்ரதா அமீன்பூனம்வல்லா
மும்பையில் வசித்து வருபர் 26 வயது ஷ்ரதா. இவர் பன்னாட்டு நிறுவனக் கால்சென்டரில் பணிபுரிந்து வந்தார். இவருடன் ஒன்றாக அதே நிறுவனத்தில் பணியாற்றியவர் அமீன் பூனாவல்லா. இருவரும் காதல்  விழுந்து லிவ் இன் டுகெதர் உறவில் வாழ முடிவு செய்தனர். அவர்களின் இந்த முடிவை  ஷ்ரதா தனது குடும்பத்தாரிடம் பகிர்ந்து அனுமதி கோரினார். ஆனால், அதற்கு அவரின் பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ஷ்ரதா பூனாவல்லாவுடன் டெல்லிக்கு சென்றார். டெல்லியில் மெஹ்ராலி பகுதியில் ஒரு அடுக்குமாடியில் வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் ஒன்றாகத் தங்கினார்கள்.
மேமாதம் முதல் ஷ்ரத்தாவின் மொபைல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. பெற்றோர் எத்தனையோ முறை அழைத்தும் பதில் தரவில்லை. இதன் பிறகு ஷ்ரத்தாவின் தந்தை அவர் வசிக்கும் இடத்திற்கு சென்றார்.  ஆனால் குடியிருப்பு பூட்டியிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த ஷ்ரதாவின் தந்தை மெஹ்ராலி போலீஸில்தனது மகளைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அமீர்பூனாவல்லாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவன் கூறிய தகவலின் படி “ ஷ்ரதாவுக்கும், பூனாவல்லாகுக்கும் உறவு நன்றாக சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் ஷ்ரதா தன்னை திருமணம் செய்யும்படி பூனாவல்லாவிடம் கூறி, வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் திருமணத்திற்கு  பூனாவல்லா சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டைகளும், சச்சரவுகளும் நிகழ்ந்துள்ளன. மே 18ம் தேதி ஷ்ரத்தாவை பூனாவல்லா கொலை செய்தார். ஷ்ரத்தாவின் உடலை மறைக்கும் வகையில் புதிய ஃப்ரிட்ஜ் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கினார். அந்த ஃப்ரிட்ஜில் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி வைத்தார். தினமும் அதிகாலை 2 மணிக்கு 18 நாட்களாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியாக எடுத்து சென்று மெஹ்ராலி வனப்பகுதியில் பூனாவல்லா புதைத்துள்ளார். இதுபோன்று18 நாட்களாக 35 துண்டுகளையும் பூனாவல்லா புதைத்து முடித்துள்ளார் என அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டனர். 

From around the web