பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்!! 3 பேர் கவலைக்கிடம்!! சாமி கும்பிட சென்ற போது பரிதாபம்!!

 
குப்புற கவிழ்ந்த கார்

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் வசித்து வருபவர் 53 வயதான  மருதை. இவர்   சொட்டுநீர் பாசனம் அமைக்கும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி 45 வயது  சாந்தி. இவர்களுடைய மகள் 21 வயது  ஐஸ்வர்யா. இவர் கல்லூரியில் படித்து வருகிறார். மருதை தன்னுடைய மனைவி மற்றும்  மகளுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட காரில் சென்று கொண்டிருந்தார்.

விபத்து

இதில் மருதை தான் காரை ஓட்டினார். இவர்கள் வேடசந்தூர்- ஒட்டன்சத்திரம் சாலை தனியார் பால்பண்ணை அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்தது.
நாயை  மோதாமல் இருப்பதற்காக மருதை சடன் பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐஸ்வர்யாவின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

போலீஸ்

சாந்தி, மருதை இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்  3 பேரையும் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web