வெள்ளத்திற்குள் அடித்துச் செல்லப்பட்ட கார்!! கூகுள் மேப்பால் விபரீதம்!!

 
வெள்ளம்

சில காலத்திற்கு முன்பு வரை சாலையில் வழியை தவற விட்டவர்கள், முகவரி தேடுபவர்கள் என அனைவரும் வழியில் தென்படும் கடைகள், ஆட்டோகாரர்கள், சத்திரம் சாவடிகளில் நேரடியாக விசாரித்து அறிந்து கொள்வர். ஆனால் தற்போதைய நவீன வாழ்க்கை முறையில் கூகுள் மேப் பார்த்து  இருப்பிடங்களை கண்டறிவது டிரெண்டாக உள்ளது. பல நேரங்களில் சரியான இடத்திற்கு கொண்டு விடும்

போலீஸ்

கூகுள் மேப் சில நேரங்களில் சொதப்பி விடுகிறது. அத்துடன் பயணம் செய்பவர்களையும் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகி விடுகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிய ஒரு குடும்பம் வெள்ளத்தில் சிக்கியது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.  கர்நாடகாவில் சர்ஜாபூர் பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் ஓசூர் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கூகுள் மேப்பில் வழி பார்த்து காரை ஓட்டி சென்றார்.

கூகுள் மேப்

செல்போனை பார்த்தபடியே காரை ஓட்டிய ராஜேஷ் பேக்கப்பள்ளி பகுதிக்கு வந்தார். அந்த பகுதியில் பலத்த கனமழை பெய்து கொண்டிருந்தது. இதனால்  மழையால் அப்பகுதியில் இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியிருந்தது. இது  தெரியாமல் காரை அந்த தரைப்பாலத்திற்குள் இறக்கிவிட்டார். இதனால் காருக்குள்  வெள்ள நீர் புகுந்தது. இதனால் காரை விட்டு வெளியேற முடியாத அவர் உடனடியாக மொபைலில்  அவசர போலீஸ் உதவியை நாடினார்.  இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் வரவழைத்து காரை தரைப்பாலத்திலிருந்து வெளியே கொண்டு வந்து ராஜேஷ் உட்பட அவரது குடும்பத்தினர்  4 பேரையும் பத்திரமாக மீட்டனர். இச்செய்தி அப்பகுதி முழுவதும் பரவி பெரும் வைரலாகி வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web