மெரினாவில் பேனா நினைவு சின்னம் எழுப்ப மத்திய அரசு அனுமதி!! உற்சாகத்தில் தொண்டர்கள்!!

 
பேனா நினைவு சின்னம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் எழுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அவரின்  இலக்கிய பணிகளை போற்றும் வகையில் சென்னை மெரினாவில் கடலில் தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவுச்சின்னம் எழுப்பலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்' என்று பெயரிடப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி ஸ்டாலின்

மாநில அரசின் இத்திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்டது. அதே நேரத்தில்  குறிப்பிட்ட இடத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொண்டு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கும் தமிழக அரசு  பொதுப்பணித்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஸ்டாலின்

இந்நிலையில், சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அருகே கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சுழல் அனுமதியை பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என  மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web