பார்ட்டியில் தங்களுடன் நடனமாட மறுத்த சிறுமியை உயிரோடு எரித்த கொடூர இளைஞர்கள் !!

 
Wedding-Party-

தங்களுடன் நடனமாட மறுத்த 10 வயது சிறுமியை இரண்டு இளைஞர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் ஹாஜிபூர் என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை திருமணம் ஒன்று நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். . அதில் கலந்துகொண்டவர்கள் ஆடல், பாடல் எனக் கொண்டாடியிருக்கிறார்கள். அதில் 18 வயதான பிரசாந்த் குமார், 20 வயதான பிரதீக் குமார் ஆகியோரும் இருந்திருக்கிறார்கள். அவர்களில் 10 வயது சிறுமியும், அவரின் நண்பர்களும் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். பிரசாந்த் குமார் பிரதீக் குமார் இருவரும், சிறுமிகளைத் தங்களுடன் சேர்ந்து ஆடுவதற்கு அழைத்திருக்கிறார்கள்.

அதற்கு அந்த சிறுமியானது மறுப்பு தெரிவித்துள்ளார்.  பலமுறை வற்புறுத்தி கூப்பிட்டும் அந்த சிறுமி நடனமாட வர முடியாது என்று சொல்லி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இரண்டு இளைஞர்கள் சிறுமியை பழிவாங்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

Wedding-Party-

இதனையடுத்து அன்றைய நாளில் இரவு 7 மணியளவில் சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக மண்டபத்திற்கு பின்பக்கம் இருக்கும் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 2 இளைஞர்கள் அந்த சிறுமியை அருகில் இருக்கும் வயவெளிக்கு தூக்கிச் சென்றனர். பின்னர் அந்த சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.

பின்பு, அந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் வந்து சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த காயமடைந்த அந்த சிறுமிக்கு ஹாஜிபூர் சதர்  மருத்துவனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறுமியைத் தீவைத்து எரித்த பிறகு, குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறது.

Wedding-Party-

தலைமறைவாக உள்ள பிரசாந்த் குமார், பிரதீக் குமார் இவர்களை தனிப்படை அமைத்து பீகார் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web