இறந்த பெண் உயிரோடு வந்த அதிசயம்!! செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடிய அப்பாவி.!

 
உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண்

உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் வந்த அதிசயம் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.   கடந்த 2015ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் அலிகாரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளார். இதுத்தொடர்பாக 2015ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி   சிறுமியின் தந்தை அலிகாரில் உள்ள காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்தார். புகாரின் பேரில்   வழக்குப்பதிந்த போலிசார்  காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். சில நாட்கள் கழித்து இறந்த பெண்ணின் சடலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

உயிரிழந்ததாக கருதப்பட்ட பெண்

அதன் பேரில் விசாரித்ததில் அந்த சடலம் காணாமல் போன 17 வயது சிறுமி என உறுதிப்படுத்தியதோடு அந்த சிறுமியை பக்கத்துவீட்டில் வசித்து வந்த விஷ்ணு என்பவர்தான் கொன்றார் எனக் குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் அந்த இளைஞர்   கைது செய்யப்பட்டு அலிகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனது மகன் குற்றம் செய்யவில்லை என்று உறுதியாக நம்பிய விஷ்ணுவின் தாய் மகனை குற்றமற்றவர் என நிருபீக்க நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷன் என பல இடங்களில் ஏறி இறங்கியுள்ளார். ஆனால் எதுவும் பலனளிக்காததால் தானே களத்தில் இறங்கி ஆதாரத்தை திரட்டியிருக்கிறார். அதன்படியே உயிரிழந்ததாக நினைத்த அந்த பெண் ஆக்ராவில் குடும்பத்தோடு வசித்து வந்ததை   விஷ்ணுவின் தாய் கண்டுபிடித்துள்ளார். 

சிறுவன் கைது

இதனையடுத்து அலிகார் காவல்துறையை நாடிய விஷ்ணுவின் தாய் நடந்ததை தெரிவித்துள்ளார். அதன்பேரில் ஹத்ராஸ் கேட் பகுதியில் இருந்த அந்த பெண்ணை போலிசார் கைது செய்தனர்.  மேலும் அந்த பெண்ணின் DNA-வை பரிசோதனை செய்ய போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.   இதன் மூலம் ஏழு ஆண்டுகளுக்கு பின்   இந்த வழக்கில் புதிய திருப்பு முனை ஏற்பட்டுள்ளது.  இறந்துவிட்டதாக கருதிய அந்த சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு உயிரோடு இருப்பதும் அந்த பெண்ணுக்கு தற்போது   திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.   17 வயதாக இருந்தபோது கோவிலுக்கு செல்வதாகச் சொல்லி வீட்டை விட்டு தனது காதலனுடன் ஹத்ரஸ் மாவட்டத்துக்கு ஓட்டம் பிடித்திருக்கிறார் அந்த சிறுமி. அந்த சமயத்தில்தான் விஷ்ணு கொலைகாரர் போலிசாரால் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

From around the web