1,100யை தாண்டிய பலி எண்ணிக்கை! பாகிஸ்தானில் தொடரும் கனமழை!

 
வெள்ள, பாதிப்புகளை பார்வையிட்ட பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தானில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 1,100க்கும் மேற்பட்டவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இந்த வெள்ளத்தில் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர்.

Pakistan

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 1,100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. அந்நாட்டில் தொடர்ந்து மீட்பு, நிவாரண மற்றும் மறுகுடியமர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது.

Pakistan

கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 1,061 போ் உயிரிழந்துள்ளனா்; 1,575 போ் காயமடைந்துள்ளனா். 9,92,871 வீடுகள் முழுமையாகவோ, பகுதியாகவோ சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக, லட்சக்கணக்கானவா்கள் தங்குமிடம், உணவு, குடிநீா் இல்லாமல் தவித்து வருகின்றனா். இந்த கனமழைக்கு 7,19,558 கால்நடைகள் பலியாகியுள்ளன என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web