பிரியாவிற்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முன்ஜாமீன் கோரி மனு!! உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு!!

 
பிரியா

தமிழகத்தின் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா. இவர் தசைப்பிடிப்பு காரணமாக சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காலில் வீக்கம் ஏற்பட்டு வலி அதிகரித்ததால், மாணவி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் மாணவி பிரியாவில் வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. உடல் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது காலின் முழங்கால் பகுதிக்கு கீழ் அகற்றப்பட்டது. எனினும், உடல்நிலை மோசமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரியா சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

பிரியா

இதனிடையே மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம்  பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தவறான சிகிச்சையே என்று கூறப்பட்டது. மேலும் தவறான சிகிச்சை அளித்ததாக மருத்துவர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.   இதேபோல் உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் ரூ.10 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் மாணவி பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அரசு வேலைக்கான பணி ஆணை, நிவாரணத் தொகை உள்ளிட்டவை பிரியாவின் குடும்பத்தினரிடம் முதல்வர் வழங்கினார்.  

அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அவருக்கு தவறான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள்   பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் இருவர் மீதும், கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது. தற்போது மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

உயர்நீதிமன்றம்

அந்த மனுவில், இதுவரை  பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். கவனக்குறைவால் தவறு நேர்ந்து விட்டது. மருத்துவக் குழு விசாரணைக்கு ஆஜராக வேண்டி இருப்பதால்  முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், தங்களை வெளியே இருக்க அனுமதிப்பதால் , சாட்சிகளை கலைக்கப் போவதில்லை எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web